வாகன ஓட்டுபவருக்கான விழிப்புனர்வு பதிவு

📖தெரிந்த விஷயம்;
✅தெரியாத உண்மை…
🚗🏍வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், *🚦சாலை 🚔விதிமுறைகள் குறித்து முழுமையாக அறிந்திருப்பதில்லை.*
🚘 பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.
*நான்குபுற விளக்கு Four indicator*
🚙சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு.
வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ நான்குபுற விளக்கினை எரியவிட வேண்டும்.
*சிக்னல் Signal*
சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, (Head light)முகப்பு விளக்குகளை எரியவிடக் கூடாது.
🚗 *வாகனங்களை முந்துதல் (Overtaking)*
ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், பிற வாகனத்தை நாம் அந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள்.
அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக
போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.
*தடுப்பு சுவர் கோடு*
ரோட்டின் நடுவில் *தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள்* போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத வேண்டும்.
*பார்வைத்திறன் (Eye sight)*
ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள்.
எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண்
பரிசோதனை செய்வது நல்லது.
*வாகனத்தின் முன்னறிவித்தல்*
ரோட்டில் வாகனம் பழுதாகி நின்றால் வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளி *முக்கோண வடிவிலான பிரதிபலிப்பானை (Triangular Reflector)* வைக்க வேண்டும்.
*முகப்பு விளக்கின் ஔியின் தூரம்(Lighting distance of Head light)*
நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.
*வளைவுகளில் மிதவேகம்*
வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும்.
அதற்கு “இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்’ என்ற முறையில் செல்ல வேண்டும்.
அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும்.
ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து
திரும்புகின்றனர்.
இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.
*சீட் பெல்ட் அவசியம்*
கார்களில் செல்வோர் *சீட் பெல்ட்* அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது.
அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.
*நான்கு வழிச்சாலையில் இயற்க்கையின் பாதுகாப்பு*
நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர்.
காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில்
இருந்து கண்களை பாதுகாக்கும்.
வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின்
வேர்கள் அதிகம் வெளி வராது.
இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை
அதிகம் “அப்சர்வ்’ செய்கிறது.
விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.
*அவசர அழைப்பு எண்*
நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112.
மொபைல் போன் “சிக்னல்’ இல்லாத
இடங்களிலும், மொபைலின் “கீ லாக்’ செய்யப்பட்ட நிலையிலும், ஏன் “சிம்கார்டு’ இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை உதவிக்கு பயன்படுத்தலாம்.

 

Written by Hari Krishna

Hi, I am hari…. I like to share some useful info…. keep in touch with >>>SCINOTECH<<<

Comments

Popular posts from this blog

How TO Fix Foundry Nuke Issue Reporter

Emerald Tree Boa

Zeer Pot help the rural poor in a cost-effective ( desert refrigerator )